C.E.O.

Mrs. R. Aruna Muthukrishnan
M.Tech, PhD (Under going)

Let’s cover the food items that are invisibly white sugar imposed on the visible food items

The excitement of saying “Brother Stronga is a tea pot” is diminishing a little when you say “no sugar” next. Let’s not even eat three meals a day. But those who are addicted to tea may not be able to stay without drinking tea … We are so addicted that we have a hard time accepting tea without sugar after diabetes.

Not only that but we could not let go of it knowing that white sugar is a poison that kills slowly

Well, palm sugar, jaggery,honey can be turned into an ancient dessert, but they cannot be included in the diet, there are some commercial shortcomings … Aruna Muthukrishnan from Madurai shares with us the solution to this

‘Usually thirty to forty per cent of people over the age of forty suffer from diabetes and obesity. If we want to have tea or any other soft drink when we go out, we can just mix it with white sugar. Thirty per cent of those who want to say, ‘I have seen everything else abroad, instead of white sugar, they have STEVIA POWDER-made ingredients and soft drinks [Coca-Cola] as an alternative to white sugar’ in India.

The bridge that connects them is SMARDT INDIA, a lofty website. The goal is to make at least twenty-five percent of the invisible white sugar impregnated ingredients in sugars (STEVIA POWDER).

Sugarcane is a plant called Stevia STEVIA. My husband is diabetic and has only been using this sugar basil for about ten years.

So to this day diabetes is under control and the body is healthy. Currently everyone in our family has switched to sugarcane.

SMARDT INDIA aims to bring sugar-based biscuit soft drinks and desserts to the masses. We had a milkshake at a restaurant outside when we went out with the family. My kids and I ate what was made of white sugar, only my husband brought it by hand and ate it with sugar. My husband ate and abused so that the rest of my baby would not be wasted ..

If SMARDT INDIA food items are available here in restaurants at times like this, everyone will be comfortable choosing it …

My wish is to help the entrepreneurs who make biscuits, soft drinks and sweets to get rid of this white sugar which is harmful to the body by making this sugar basil … The next generation should get rid of this white sugar. Sugarcane is another creation of nature in the order of blackberry and honey.

All food items can be prepared with this sugar basil. Many people in our country are suffering from not being able to eat this white sugar and this basil is a boon to them.

By the year 2030, the number of diabetics will increase to 98 million and the number of obese people will increase manifold. To avoid this, people and food companies can avoid these white sugary foods if they work with full breath.

These can be taken not only by diabetics but also by children to adults.

In our country as well as abroad, everyone should be healthy by producing biscuit soft drinks and ice cream made from this sugar basil.

There is also a good export opportunity for this type of product abroad. Ask me for more information on this “Mrs. Aruna Muthukrishnan concluded ….

I would like to conclude the article with the proverb Nammazhvar Ayya

God and nature won’t never go wrong

Stevia is a another creation of Nature like Honey and Palm Sugar.

கண்ணுக்கு தெரிந்த உணவுப்பொருட்களில் கண்ணுக்குத் தெரியாமல் வெள்ளை சர்க்கரை திணிக்கப்படும் உணவு பொருட்களுக்கு முற்றுவைப்போம்

“தம்பி ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுப்பா” என்று சொல்லும் போது இருக்கும் உற்சாகம் அடுத்ததாக “சுகர் இல்லாம” என்று சொல்லும் போது கொஞ்சம் குறைந்து தான் போகிறது. மூன்று வேளை கூட சாப்பிடாமல்  இருந்து விடுவோம். ஆனால் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு வேளை கூட தேநீர் அருந்தாமல் அவர்களால் இருக்கமுடிவதில்லை… அந்த அளவிற்கு அடிமையாகும் நாம் சர்க்கரை வியாதி வந்த பின்னர் சர்க்கரை இல்லாமல் தேநீர் குடிப்பதை மிகவும் சிரமப்பட்டு தான் ஏற்றுக்கொள்கிறோம்..

அது மட்டுமல்ல வெள்ளை சர்க்கரை  மெதுவாக கொல்லும் ஒரு நஞ்சு என்று தெரிந்தும் நம்மால் அதனை விட முடியவில்லை…

சரி கருப்பட்டி, வெல்லம் என்று பண்டைய கால இனிப்பானுக்கு மாறலாம் என்றாலும் அவற்றை அணைத்து உணவு முறைகளிலும் சேர்க்க இயலவில்லை  வியாபார ரீதியாக சில தொய்வுகள் உள்ளன…‌  இதற்கான  தீர்வை நம்மிடம் பகிர்கிறார் மதுரையைச் சேர்ந்த அருணா முத்துகிருஷ்ணன்…

‘பொதுவாக நாற்பது வயதிற்கு மேல் உள்ளவர்களில் முப்பதிலிருந்து நாற்பது  சதவீதம் பேர் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. நாம் வெளியே செல்லும் போது தேநீரோ அல்லது வேறு ஏதேனும் குளிர்பானம் சாப்பிட நினைத்தால் வெள்ளை சர்க்கரை கலந்து தான் கிடைக்கும். ‘இதற்கு மாறாக வேறு இல்லையா வெளிநாடுகளில் எல்லாம் பார்த்தேன் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக சீனித்துளசியினால் STEVIA POWDER செய்த பதார்த்தங்கள் , குளிர்பானங்கள் [Cococola]  உண்டு என்கிறார்களே’  என்று வேண்டுவோரில் முப்பது சதவீதம் பேர் இந்தியாவிலும் இருக்கின்றார்கள்.

அவர்களை இணைக்கும் பாலமாக நாங்கள் அமைத்துள்ளது தான் SMARDT INDIA என்ற ஓர் உன்னத நோக்கம் கொண்ட வலைத்தளம். இதன் நோக்கம் என்ன வென்றால் கண்ணுக்கு தெரிந்த உணவுப்பொருட்களில் கண்ணுக்குத் தெரியாமல் வெள்ளை சர்க்கரை திணிக்கப்படும் பொருட்களில் இருபத்தைந்து சதவீதம் பொருட்களையாவது சீனித்துளசி SUGAR (STEVIA POWDER) யினால் செய்து கொடுக்க வேண்டும் என்பது தான்.

சீனித்துளசி என்பது ஸ்டீவியா STEVIA என்னும் தாவரம். எனது கணவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்,  அவர் சுமார் பத்து ஆண்டுகளாக  இந்த சீனித்துளசி   மட்டுமே உபயோகிக்கிறார்.‌

அதனால் இன்று வரை சர்க்கரை நோயும் கட்டுக்குள் உள்ளது உடல் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். தற்போது எங்கள் குடும்பத்தில் அனைவரும் சீனித்துளசிக்கு மாறி விட்டோம்.

சீனித்துளசியினால் செய்த பிஸ்கெட் குளிர்பானங்கள் இனிப்பு பதார்த்தங்கள் இவற்றை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் SMARDT INDIA வின் நோக்கம். நாங்கள் குடும்ப சகிதமாக வெளியே சென்றபோது வெளியே ஒரு உணவகத்தில் மில்க் ஷேக் சாப்பிட்டோம். நானும் எனது குழந்தைகளும் வெள்ளை சர்க்கரையில் செய்தது சாப்பிட, எனது கணவர்  மட்டும் அவர் கையுடன் எடுத்து வந்து சீனித்துளசிசேர்த்து சாப்பிட்டார். என் குழந்தை மீதம் வைத்ததை வீணாகிவிடக்கூடாது என்று என் கணவர் சாப்பிட்டு உடல் உபாதைக்கு உள்ளானார்..

இந்த மாதிரி சமயங்களில் உணவகங்களில் SMARDT INDIA உணவு பதார்த்தங்கள் இங்கு கிடைக்கும் என்றால்,  அனைவருமே அதை தேர்வு செய்ய வசதியாக இருக்கும்…

பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு பதார்த்தங்கள் செய்யும் தொழில்முனைவோர் இந்த சீனித்துளசியினால் செய்து உடலுக்கு கேடு விளைவிக்கும் இந்த வெள்ளை சர்க்கரையை அடியோடு ஒழிக்க உதவிட வேண்டும் என்பதே எனது விருப்பம்… இனிவரும் தலைமுறையினராவது இந்த வெள்ளை சர்க்கரையிலிருந்து விடுபட வேண்டும். பனங்கருப்பட்டி,  தேன் போன்ற வரிசையில் இயற்கையின் மற்றுமொரு படைப்பான சீனித்துளசி….

இந்த சீனித்துளசியில்   அனைத்து உணவு பொருட்களும் தயாரிக்க முடியும். நம் நாட்டில் பலர் இந்த வெள்ளை சர்க்கரையை சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர், அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் இந்த இந்த சீனித்துளசி

வரும் 2030 ஆம் ஆண்டில் சர்க்கரை நோயாளிகள்  98 Million எண்ணிக்கையும் உடல் பருமன் ஆவோர் எண்ணிக்கையும் பலமடங்கு உயரும். இதை தவிர்க்க மக்களும் உணவுத்துறை நிறுவனங்களும் முழு மூச்சாக செயல்பட்டால் இந்த வெள்ளை சர்க்கரை உணவு பதார்த்தங்களை தவிர்க்க இயலும் சீனித்துளசி இனிப்போடு

இவற்றை சர்க்கரை நோயாளிகள் மட்டும் அல்லாமல் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

வெளிநாடுகள் போன்று நம் நாட்டிலும் இந்த சீனித்துளசியினால் செய்த பிஸ்கெட் குளிர்பானங்கள் ஐஸ்கிரீம் இவற்றை உற்பத்தி செய்து அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இந்த வகை தயாரிப்புகளுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்பும் உண்டு. மேலும் இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வேண்டுமானால் என்னிடம் கேளுங்கள்” என்று நிறைவாக பேசி முடித்தார் திருமதி அருணா முத்துகிருஷ்ணன்….

கட்டுரையின் நிறைவாக நம்மாழ்வார் அய்யா பழமொழியுடன் நிறைவு பெற விரும்புகிறேன்

இறைவனும் இயற்கையும் ஒரு போதும் தவறு இழைக்க மாட்டார்கள்

சீனித்துளசி கருப்பட்டி தேன் போன்ற இயற்கையின் படைப்பில் மற்றுமொரு படைப்பு.

Back to Top